சிரியாவிற்கு உதவிய வடகொரியா? ரசாயண ஆயுதங்களை தயாரிக்க உதவியது அம்பலம் .....

சிரியாவில் ரசாயண ஆயுதங்களை தயாரிக்க தேவையான உபகரணங்களை வடகொரியா அனுப்புகிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

சிரியாவில் ரசாயண ஆயுதங்களை தயாரிக்க தேவையான உபகரணங்களை வடகொரியா அனுப்புகிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போதும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது விமர்சனத்திற்கு உள்ளாகியது. சிரியாவில் சிறார்கள் போரில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிரிய ராணுவம் விஷவாயு தாக்குதலை அவ்வபோது முன்னெடுத்து வருகிறது.

சர்வதேச நாடுகளின் கண்டனத்தை மீறி ரஷியாவின் உதவியுடன் அல் ஆசாத் அரசு அடாவடியான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.சிரியாவில் கிழக்கு கூட்டா பகுதியை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகளும், ரஷிய படைகளும் இணைந்து 8 நாட்கள் நடத்திய தாக்குதல்களில் 560–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என அங்கு உள்ள மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகிறது.

பொதுமக்கள் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர், அவர்களுக்கு எந்தஒரு உதவியும் செல்ல முடியாத நிலையே அங்கு நீடிக்கிறது. மருத்துவ உதவி கிடைக்காமல் சிறார்கள், பெண்கள் தவிப்பது உலக சமுதாயத்தை உலுக்குவதாக அமைந்து உள்ளது. சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிரியாவில் தினமும் 5 மணி நேர போர் நிறுத்தத்தை அமல்படுத்துமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். 30 நாள் போர் நிறுத்தம் கோரப்பட்ட நிலையில் 5 மணி நேரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்றே தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் அடாவடி:

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா, அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருகிறது.

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு நிலைகளில் தொடர் பொருளாதார தடைகளை எதிர்க்கொண்டு வரும் வடகொரியா இவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இதுவரையில் வெளிநாட்டு விவகாரங்களில் வடகொரியாவின் பெயர் அடிபட்டது கிடையாது. சீனா மற்றும் பாகிஸ்தான் வழியாகவே வடகொரியா அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்ற உதவிகள் செல்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இப்போது சிரியா ரசாயண ஆயுதங்களை தயாரிக்க தேவையான உதவிகள் அனைத்தையும் வடகொரியா செய்கிறது என்பது தெரியவந்து உள்ளது.

சிரியாவில் ரசாயண ஆயுதங்களை தயாரிக்க தேவையான உபகரணங்களை வடகொரியா அனுப்புகிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

2012 மற்றும் 2017 கால கட்டங்களில் வடகொரியாவில் இருந்து சிரியாவிற்கு ஆயுதம் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விஷவாயு ஆயுதங்கள் தயாரிப்புக்கான கொள்கலன்கள், வால்வுகள் மற்றும் குழாய்கள் ஆகியவை அடங்கும் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான அறிக்கையானது இன்னும் வெளியிடப்படவில்லை. வடகொரியாவின் ஏவுகணை தயாரிப்பு நிபுணர்கள் சிரியாவின் ஆயுத தயாரிப்பு மையங்களில் காணப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிரிய படைகளால் குளோரின் பயன்படுத்தப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, ஆனால் அந்நாட்டு அரசு அதனை மறுக்கிறது. இந்நிலையில் புதிய குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது.

சிரிய ராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைய முடியாத நிலையே நீடிக்கிறது. இதற்கிடையே கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என ரஷியா குற்றம் சாட்டுகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவும் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. வடகொரியாவில் இருந்து கிடைக்கும் உதவிக்கு சிரியா சட்டவிரோதமாக நிதியை வழங்கி வருகிறது எனவும் நிபுணர்கள் குற்றம் சாட்டுகிறாகள். வடகொரியா ஐ.நா.வின் தீர்மானங்களை மீறுகிறது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.