சியோல் : அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே, தேச விரோத சக்திகளை ஒழிக்க அவசரநிலை இராணுவ சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அதிபர் யூன் சூக் இயோல் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது அதன்காரணமாக இப்படியான அவசரநிலை சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் அறிவித்தது […]
பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் நேற்றைய 5-வது நாளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் கொரியா (வட கொரியா, தென் கொரியா) நாடுகள் கலந்த கொண்டு விளையாடியது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்திருந்தது. இதனால் 2 நாடுகளுக்கும் இடையே சற்று முட்டலும், முதலுமாக இருந்து வந்தது, இந்நிலையில், நேற்றைய நாளில் இந்த 2 நாடும் டேபிள் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவின் […]
வடகொரியா: ரஷிய அதிபரான வ்லாதிமிர் புடின், 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவுக்கு செல்லவிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ரஷ்ய அதிபரான புடின் வட கொரியா நாட்டிற்கு பயணப்பட இருக்கிறார். மேலும், பயணத்தில் வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் உன் உடன் நேரிடையான பேச்சுவார்த்தைக்கும் புடின் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேற்கத்திய நாடுகளின் பெரும் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இரு நாடுகளும் (ரஷ்யா-வடகொரியா), நாட்டின் பாதுகாப்புக்காகவும் மற்றும் பொருளாதாரத்துக்காகவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த […]
சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வழிகாட்டுதலின் பெயரின் ஏற்கனவே 2023 மார்ச் மாதம் முதல் ‘ஹெயில்’ எனும் கடலுக்கு அடியிலான அணுஆயுத சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. இனி அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள கூடாது என ஐநா […]
North Korea: வட கொரியா நாட்டில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மர்மமான ஒரு நாடாக வட கொரியா விளங்குகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகம் வெளியில் தெரிவதில்லை. அந்நாட்டின் அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டால் மட்டுமே அந்நாட்டின் நடப்பது குறித்த தகவல்கள் வெளிவரும். Read More – இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! அந்த வகையில் வட கொரியாவில் நாய்களை […]
வட கொரியா புதிய போர்க்கப்பல்கள் மற்றும் புதிய வகை விமான எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கூடிய க்ரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. சர்வதேச அளவில் தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த அடிக்கடி ஏவுகணை சோதனைகளை அண்டை நாடான தென்கொரிய கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த வகையில், நேற்று (பிப்ரவரி 2) வட கொரியா மேற்கு கடற்கரையில் இருந்து கப்பல் ஏவுகணைகள் மற்றும் நிலத்திலிருந்து வான் […]
தென் கொரியாவின் யோன்பியோங் தீவு அருகே இன்று காலை வட கொரியா 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. இதனையடுத்து, யோன்பியோங் தீவில் உள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு தென் கொரியா கேட்டுக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரிய இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யோன்பியோங் கிராம அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். வட கொரியா தாக்கிய குண்டுகளால் தென் கொரியாவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும், […]
ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோன்ஷு அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். டோக்கியோ, காண்டோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று ஜப்பானின் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை (21 நிலநடுக்கங்கள்) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை […]
அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அத்துடன் கிம் ஜோங் உன் ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதலுக்கு பிறகு அமெரிக்கா வடகொரியாவை எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியதாவது, அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக எந்தவொரு அணுசக்தி தாக்குதலையும் வடகொரியா செயல்படுத்தினால் அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறினார். இது ஏற்றுக்கொள்ள […]
வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது, இதில் ஒன்று மத்திய மற்றும் வடக்கு ஜப்பானின் சில பகுதிகளில் விழுந்தது. வட கொரியா குறைந்தபட்சம் ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவிஇருக்கிறது. இதனால் மத்திய ஜப்பானில் உள்ள மியாகி, யமகட்டா மற்றும் நிகாட்டா மாகாணங்களில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடையும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏவுகணை முதன்முதலில் ஏவப்பட்ட சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு, அது விழுந்துவிட்டதாக ஜப்பானின் கடலோர காவல்படை கூறியது. மேலும் இது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கிழக்கே 1,100 […]
வடகொரியா தென்கொரியாவின் கடற்கரை பகுதிகளை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியுள்ளது. தென் கொரியா தனது வருடாந்திர இராணுவ ஒத்திகையை முடித்துக் கொண்டிருக்கும் போது வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய சம்பம் நிகழ்ந்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் ஒரு பக்கம் நின்றால் , வடகொரியா மட்டும் வித்தியாசமான ஏதாவது செய்து , எப்போதும் செய்தியாவது அந்நாட்டின் வாடிக்கையாகிவிட்டது. அது கொரோனா முதல் ஏவுகணை பரிசோதனை வரை தொடர்கிறது. தொடர்ந்து வடகொரியாவின் இதுபோன்ற செயல்களை ஐநா அமைப்பு […]
வட கொரிய தலைவர் கிம் ஜாங், தனது நாடு ஒருபோதும் அதன் அணு ஆயுதங்களை கைவிடாது என்று அறிவித்துள்ளார். வட கொரிய மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நிலை அல்லது நாட்டின் மீது தாக்குதல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை “உடனடியாக” பயன்படுத்த இராணுவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இச்சட்டத்தை நிறைவேற்றிய பின், மக்கள் சட்டமன்றத்தின் உரையில், “அணு ஆயுதக் கொள்கையை சட்டப்பூர்வமாக்குவதன் மிக முக்கியத்துவம், எங்கள் அணு […]
வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 10 நாள் நினைவு அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் (Kim Jong il) அவர்களின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 17 ) அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி வட கொரியா அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை வட கொரியாவில் விதித்துள்ளது. அதுவும் இன்று […]
வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், 2025 வரை குறைவாக உணவு உண்ண வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக வட கொரியா நாடு பிற நாடுகளுடன் எல்லைக்கு சீல் வைத்து கொண்டது. மேலும், உணவுப் பொருட்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வடகொரியா மூடியது. இதனால் வட கொரியாவில் உணவுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் 3,300 […]
வடகொரியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வார இறுதியில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த சோதனை ஏவுகணை தண்ணீருக்கு மேல் 1500 கிலோமீட்டர் பயணம் செய்ததாகவும், இந்த ஏவுகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூல ஆயுதம் எனவும், இது […]
தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். வெளிநாட்டு படங்களைக் காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பொதுவாகவே மக்கள் தங்களது பொழுதுபோக்காக வைத்திருப்பது திரைப்படங்களைப் பார்ப்பது தான். தற்போதுள்ள வளர்ச்சியின் காரணமாக வெளிநாடுகளில் உருவாகிற திரைப்படங்களை கூட நமது தொலைபேசியிலேயே கண்டு விடலாம். ஆனால் வட கொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவை பொருத்தவரையில் அந்நாட்டு அரசு பல்வேறு வித்தியாசமான சட்டங்களை […]
கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது போன்றவற்றிக்கு தடை விதித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். வடகொரிய தலைவர் தலைவர் கிம் ஜாங்-உன்,மேற்கத்திய தாக்கங்களைத் தடுக்க வினோதமான சட்டங்கள் அமல்படுத்துவதில் பெயர் பெற்றவர்.அந்த வகையில்,கிம் ஜாங்-உன் சமீபத்தில் கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது,ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல் வைப்பது போன்றவை ‘முதலாளித்துவ வாழ்க்கை முறை’ மற்றும் இளைஞர்கள் மீதான […]
வட கொரியாவில் ஒருவருர் கூட கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் கொரொனோ வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.வைரஸின் தாக்குதலுக்கு பலர் இறந்துள்ளனர்.இந்நிலையில் வடகொரியாவானது தங்கள் நாட்டில் எவருக்கும் கொரொனோ தொற்று பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. எனினும், கொரொனோ வைரஸானது ஆரம்பத்தில் சீனாவில் இருந்து பரவியதால் அதன் நட்பு நாடான வடகொரியாவிலும் அதன் தாக்கம் தற்போது வரை இருக்கலாம் […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்க்கு கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு முன்னாள் அதிபரின் ஆலோசகர் சாங் சாங்- மின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும் பல செய்திகள் வெளியானது. மேலும் அதிபர் கிம் ஜாங் உன், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் அதிபர் கிம்மின் உடல்நிலை […]
சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்துவிட்ட ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரையில், வடகொரியாவை பாதிக்காமல் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அறிந்தவுடன், அந்நாட்டு அரசு, நாட்டின் எல்லையை கடந்த 6 மாதங்கங்களுக்கு முன்பாகவே மூடிவிட்டது. மேலும், எல்லை எல்லைகடந்து வந்தவர்களையும் தனிமைபடுத்தி இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், வடகொரியாவில் தற்போது முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர், தென் […]