டமாஸ்கஸி : சிரியா நாட்டில் உள்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றி விட்டனர். அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை முழுதாக கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் தலைநகரை விட்டு தனிவிமானம் மூலம் தப்பி சென்றுள்ளார். இதனால் தப்பி சென்ற சிரியா நாட்டு அதிபரை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவம் மற்றும் உளவுத்துறை மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் அந்நாட்டு செய்தி நிறுவனங்களின் தகவலின்படி […]
70 சதவீத பகுதிகளை சிரியாவின் கிழக்கு குவாட்டா நகரில் போராளிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக அரசுப் படைகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சிரிய ராணுவமும் தற்போது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. குவட்டா நகரில் இருந்து நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேறி […]
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே தனது அழுகையாலே சிரியா மக்களை வரவேற்றுள்ளார்.இது உங்களின் வீடு,வாருங்கள் என்று கூறினார் .அகதிகளாக வரும் சிரியா மக்களை தானே விமானம் அனுப்பி வரவேற்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு யுத்தத்தால் சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கனடா நேசக்கரம் நீட்டியுள்ளது. உள்நாட்டு போர் சிரியாவில் மிகவும் உக்கிரம் அடைந்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் 800 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
சிரியாவில் ரசாயண ஆயுதங்களை தயாரிக்க தேவையான உபகரணங்களை வடகொரியா அனுப்புகிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது. சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போதும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது விமர்சனத்திற்கு உள்ளாகியது. சிரியாவில் சிறார்கள் போரில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிரிய ராணுவம் விஷவாயு தாக்குதலை அவ்வபோது முன்னெடுத்து வருகிறது. […]
சிரிய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் இடங்களை தேடித் தேடி தாக்குதல் நடத்தி வருகிறது சிரிய அரசுப்படை. இந்த கிளர்ச்சியாளர்கள், பொதுமக்கள் நடுவே வசித்து வருவதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அனைவர் மீதும் சிரிய ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் முதல் சிரியாவின் கிழக்கு கெளட்டா பகுதியில் தொடர்ந்து வரும் தாக்குதலினால், இதுவரை 541 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து […]