வித்தியாசமான சுவையில் கோடையை இளநீர் சூப்புடன் ஜமாய்திடுவோம்

This news gives information about Summer coconut waterSoup withJamaytituvom-kodaiyai ilaneer soupudan jamaithiduvom

கோடைகாலம்  என்றாலே அனைவரும் பல நோய்கள் வந்து நம்மை தொற்றி கொள்ளும். கோடையில் எப்போதும் தாகம் எடுப்பது போல் ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும். எனவே தான் நாம் கோடைகாலங்களில் அதிக அளவு ஜூஸ் குடிக்கிறோம்.

இளநீர் சூப் செய்வது எப்படி?

கோடையை குளிர்ச்சியாக்கும் இளநீர் சூப் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்

இளநீர் வழுக்கை – 1/4 கப்

இளநீர் – 1 கப்

காய்ச்சி, ஆறவைத்த பால் – 2 டீஸ்பூன்

வெள்ளை மிளகு தூள் – 1/4  டீஸ்பூன்

கருப்பு மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கேரட் – 2 டீஸ்பூன் (நறுக்கியது)

பீன்ஸ் – 2  டீஸ்பூன்(நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

unknown node

முதலில் இளநீர் வழுக்கை எடுத்து கால் கப் இளநீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து  நன்கு வதக்கவும். காய்கள் நன்கு வதங்கியவுடன் அரைத்த  விழுதை சேர்க்கவும்.

அதனுடன் வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள், உப்பு சிறிதளவு  மீதியுள்ள இளநீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு  கொதிக்கவிடவும். ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். பின்பு காய்ச்சிய பாலை  ஊற்றி கிளறி பரிமாறவும். இப்போது சுவையான இளநீர் சூப் தயார்.