பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 6 பேர் பலி ,31 பேர் படுகாயம் !!!

This news gives information about Six soldiers were killed and 31 injured in the attack on terrorists-payankaravathikal nadathiya thakuthalil

மக்மூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் துணை ராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 6 பேர் பலி ,31 வீரர்கள் படு காயம் அடைந்தனர்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை  ஒழிக்க  ராணுவ வீரர்களுக்கும் ,அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஹசாத் ஷாபி என அழைக்கப்படும் அணிதிரள் படை வீரர்கள். இவர்கள் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடுவதால் இவர்களை  துணை ராணுவ வீரர்களாக பார்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் துணை ராணுவ வீரர்கள் விடுமுறையையொட்டி தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக தலைநகர் பாக்தாத்தில் இருந்து சலாலுதீன் மாகாணம் நோக்கி பஸ்களில் சென்று கொண்டியிருந்தார்கள்.

மக்மூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் துணை ராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்தும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர் .மேலும் இந்த தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 31 வீரர்கள் படு காயம் அடைந்தனர்.இந்த தாக்குதலை பார்க்கும் போது புல்வாமா தாக்குதல் போன்று துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.