ப்ரோ கபடி லீக்கின் 6வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த கபடி லீக்கில் மொத்தம் 12 அணிகள் மொத உள்ளன. இதில் இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோத உள்ளன.
unknown nodeஇதில் ‘ஏ’ பிரிவில்தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ்ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன்பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ்ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வரை சென்னை, சோனிபட், புனே, பாட்னா, கிரேட்டர் நொய்டா (உ.பி.), மும்பை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.தமிழ் தலைவாஸ் அணியில்அஜய் தாக்கூர், மன்ஜித் ஷலாங், அமித் ஹூடா, ஜஸ்விர்சிங் தர்ஷன்போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். கடந்து சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து3 முறைபட்டம் வென்றுள்ளது. அந்த அணியின் முக்கிய நட்சத்திர வீரராக அந்த அணியின் கேப்டன்பர்தீப் நார்வால்உள்ளார். மேலும்தீபக் நார்வால் ஜெய்தீப், விகாஸ் காலேபோன்ற வீரர்கள் உள்ளனர். மற்றொரு ஆட்டத்தில் மும்பை- புனேரி பல்தான் அணிகள் இரவு 9 மணிக்கு மோத உள்ளன.
DINASUVADU