குழந்தை பெற்ற பிறகு காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நியூசிலாந்து பிரதமர்

New Zealand Prime Minister engaged with her boyfriend after having a baby

நியூசிலாந்து  பிரதமர் ஜெசிந்தா  2017-ம் ஆண்டு  தனது 37 வயதில் பதவி ஏற்றார். இவர் மிக இளம் வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை அடைந்தார்.ஜெசிந்தா பிரதமராக பெறுப்பேற்பதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டுடன் காதலித்து வந்தார்.

2014-ம் ஆண்டு தனது தொகுதி பிரச்சினைக்காக ஜெசிந்தாவை ,கிளார்க் கேபோர்டு சந்தித்த போது இருவருக்கும்  காதல் மலர்ந்தது.அதன் பின்பு  திருமணம் செய்து கொள்ளாமல்  இருவரும்  ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.இதனால் இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில்  கிளார்க் கேபோர்டு தனது தொகுப்பாளர் வேலையை விட்டுவிடு  வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து  வருகிறார்.இந்நிலையில் ஜெசிந்தா மற்றும் கிளார்க் கேபோர்டு ஆகிய இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை  ஜெசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.