கவனத்திற்கு "நவராத்திரியின்" போது இதை செய்யவே கூடாது....!!

நவராத்திரி 9 நாட்கள் வீடுகளில் உற்சாகமாக கொண்டாடுவோம் ஆனால் நாம் குறிப்பிட்ட சிலவற்றை செய்ய கூடாது என்பதை மறந்து விடுகிறோம்.தேவியரை வீட்டில் வைத்து வணங்கும்

நவராத்திரி 9 நாட்கள் வீடுகளில் உற்சாகமாக கொண்டாடுவோம் ஆனால் நாம் குறிப்பிட்ட சிலவற்றை செய்ய கூடாது என்பதை மறந்து விடுகிறோம்.தேவியரை வீட்டில் வைத்து வணங்கும் நாம் இப்படி செய்வதால் எதிர் பயன்களே நமக்கு வந்து கிடைக்கிறது.அப்படி என்ன செய்ய கூடாது என்று பார்ப்போம்.

unknown node

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் கூடாது. மேலும் அன்று ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காமல் நீராடி  புரட்டாசி சனி விரதத்தையும் கடைப்பிடிக்கலாம்.

unknown node

மேலும் அன்னை கோலத்தை விரும்புபவள் ஆகையால் நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.செம்மன் இட்டு கோலம் இட்டால் அன்னை மகிழ்வாள்.

unknown node

9 நாட்களும் அன்னைக்கு விரதம் இருந்து வழிபடுபவர்கள் இந்த நவராத்திரி விரதம் முடியும் வரை தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.மெத்தை,பாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

unknown node

அதனை போல் விரத நாட்களில் விரதம் இருப்பவர்கள் நகம்,முடி வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்மேலும் கொலு பொம்மைகளை வீட்டில் வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும் நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.ஆனால் பெரும்பாலும் கோலம் போடாமல் வழிபடுவது தவறாகும்.

unknown node

மேலே குறிப்பிட்ட தகவல்கள் தங்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகிறேன் இவற்றை களைந்து காளிதேவியாக மகிஷ்சசுர மர்த்தினியாக அருளும் துர்க்கை தாயை கண் குளிர கண்டு வழிபட்டு வாழ்வில் இருள் அகற்றி வெளிச்சம் என்னும் ஒளியை எட்டி பிடிப்போம் தாயின் அருளால் நலம்..!

DINASUVADU

கவனத்திற்கு "நவராத்திரியின்" போது இதை செய்யவே கூடாது....!!