லண்டனில் சொகுசு பங்களாவில் வாழ்ந்து வரும் நிரவ் மோடி !!!

This news gives information about Modi is a living luxury bungalow in London-londanil sogusu valkai valnthu varum nirv modi

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடி.

லண்டனில் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பு  உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருகிறார்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் , நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. , அமலாக்கப்பிரிவு , வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியது. இங்கிலாந்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் டெய்லி டெலிகிராப்  வெளியிட்ட  வீடியோவில் நிரவ் மோடியின் சொகுசு வாழ்க்கை வெளியாகி உள்ளது.

நிரவ் மோடி லண்டனில் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பு  உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவதாகவும் , அந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது.

மேலும் சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் , லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிரவ் மோடி சாதாரணமாக தனது சொகுசு பங்களாவில் இருந்து  நாயை கூட்டிக் கொண்டு அருகில்உள்ள  தனது அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.

லண்டனில் சொகுசு பங்களாவில் வாழ்ந்து வரும் நிரவ் மோடி !!!