நிரவ் மோடியின் ஜமீனை நிராகரித்த லண்டன் நீதிமன்றம்

This news gives information about London Court rejectsNirv Modi Jamine-nirav modiin jaminai nirakaritha nithimandram......

இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய கடந்த 18-ம் தேதி வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் ,அவரது  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி  விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.

அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர்.சில நாட்களுக்கு முன் லண்டனின் மேற்கு முனை பகுதியில் உள்ள சுமார் ரூ.75 கோடி மதிப்பிலான பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய கடந்த 18-ம் தேதி வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் மார்ச் மாதம் 29-ம் தேதி வரை காவலில் வைக்க  உத்தரவிட்டது.

நிரவ் மோடியின் ஜமீனை நிராகரித்த லண்டன் நீதிமன்றம்