ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால்.... நம்ம லெவலே வேற......!!!!

This news gives information about if only we had raphel flight our levels is different - raphel vimaanam mattum nammidam irunthirunthaal namma levale vera

பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

கட்சிகள் செய்த அரசியலால் தான் ரபேல் விமான விவகாரத்தில் நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பாகிஸ்தான் வசம் பிடிபட்ட அபிநந்தன் விடுதலை குறித்தும், அபிநந்தன் குறித்தும் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை  பாகிஸ்தான் அரசு, 3 நாட்களில் விடுவித்ததன் மூலம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ரபேல் போர் விமானம்

unknown node

நம்மிடம் ரபேல் போர் விமானம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையை தற்போது அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும், ரபேல் விமானம் மட்டும் தற்போதுள்ள சூழலில் நம்மிடம் இருந்திருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், கட்சிகள் செய்த அரசியலால் தான் ரபேல் விமான விவகாரத்தில் நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் பின்னால் உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியில் திரண்டிருந்த நிலையில், அரசியல் கட்சிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட தாக்குதல் குறித்த கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால்.... நம்ம லெவலே வேற......!!!!