ப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா

Here is the information about Do you know how to do it Broccoli bread ?-brocoli rotti eppadi seivathu enpathai parri ariveera

ப்ரோக்கோலி ரொட்டி உடலுக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்க கூடிய உணவாகும்.

ப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?,

ப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள்:

ப்ரோகோலி – 1/4 கப்

உப்பு – தேவைகேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி – ஒரு சிறு துண்டு

கோதுமை மாவு – 1 1/2 கப்

செய்முறை:

unknown node

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ப்ரோகோலி  மூன்று நிமிடம் கொதிக்க விடவும். பின்பு இறக்கி ஆறிய பின்  தண்ணீரை வடிகட்டி ப்ரோகோலியை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு  இஞ்சி ,ப்ரோகோலி,கொத்தமல்லி, ப்ரோக்கோலி வேகவைத்த தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில்  போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து கோதுமை மாவு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு ப்ரோக்கோலி வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து  பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி போட்டு எடுக்கவும்.  இப்போது சூடான சுவையான ப்ரோக்கோலி சப்பாத்தி ரெடி.

ப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா