மனிதர்களை போல இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிம்பன்ஸி குரங்கு! வைரலாகும் வீடியோ உள்ளே

Chimpanzee monkey diamonds used by Instagram as humans

இன்றை இளைய தலைமுறையினர் சமூக வலைதலங்களை  அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ் ஆப் , இன்ஸ்டாகிராம் ,டிக் டாக் ஆகிய  சமூக வலைதலங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் பலர் செல்ஃபி  எடுத்த தங்களது புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் ஆப்பில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.இது போன்ற செல்ஃபி மோகம் கொண்டவர்கள் சமூக வலைதலங்களுக்கு அடிமையாகி விட்டனர்.

இந்நிலையில் சமூக வலைதலங்களுக்கு மனிதர்கள் மட்டும் அடிமையாக வில்லை விலங்குகளும் கூட அடிமையாகி விட்டது. சிம்பன்ஸி குரங்கு ஒன்று இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாகி  செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த விடியோவை மைக் ஹால்ஸ்டன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சமீபத்தில் கொரில்லா குரங்குகள் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க வித்தியாசமான போஸ் கொடுத்த சம்பவம் வைரலானது.

இந்நிலையில் இந்த விடியோவை இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  பார்த்து உள்ளனர்.

https://media.dinasuvadu.com/uploads/2019/04/58324202_440039290137602_7420779781756551168_n.mp4