தூத்துக்குடியில் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் தேர்தல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார்.இதையொட்டி நடந்த தேர்தலில் பொருளாளர் வீரபத்திரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் .
டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்துகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயலாளர் செல்வன், மாநில பொருளாளர் கோபிரத்தினம், மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் மற்றும் நெல்லை, குமரி மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.