Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற […]
Thoothukudi Firing : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.? என உயர்நீதிமன்றம் கேள்வி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது , கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இந்த போராட்டம் மாபெரும் பெரும் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், […]
PM Modi : இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுபோன்று பல்வேறு முடிவுற்ற திட்டங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர், தூத்துக்குடியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..! அதேசமயத்தில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் […]
Narendra modi : மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடக்கத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை சென்ற பிரதமர், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கிய […]
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் நலன் கருதி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பில் வேம்பார் பனைபொருள்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் 10 கோடி மதிப்பில் கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் […]
தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பி்ன்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து […]
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திண்டுக்கல்லில் 3 மணிநேரம் கனமழை கொட்டியது. மேலும், கொடைக்கானலில் 4 மணிநேரமாக கனமழை கொட்டுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவக்கியுள்ளது. வரலாற்றில் […]
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. […]
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், […]
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து பல்வேறு வகையான முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் 5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த மின்சார […]
தென் மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்திலையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். சமீபத்தில், நடிகர் விஜய் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) இன்று திறக்கப்பட்டது. அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுகள் ஒரே வினாத்தாள் முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரையாண்டு விடுமுறை […]
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், ‘தலைவர் 170’ படத்திற்கு ‘வேட்டையன் ‘என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் நடிக்கிறார். மேலும், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான […]
தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பில் இருந்து தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், அனைத்து உதவிகளையும் மத்திய அரசு […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் […]
தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்ட மக்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை […]