உங்க குழந்தைகள் பூச்சி தொல்லையால கஷ்டப்படுறாங்களா? அப்ப இதை செய்ங்க

This article gives information about are your children suffering from pestilence then do this - unga kulanthaikal pochi tholaial kastapadurangal

குழந்தைகளுக்கு வயிற்று பூச்சி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிமுறைகள்.

குழந்தைகள் என்பது நமக்கு இறைவன் கொடுத்த செல்வம். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் பெற்றவர்களால் தாங்கி கொள்ள இயலுவதில்லை. ஆனால், குழந்தைகளை பொறுத்தவரையில், தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்களால் சொல்ல இயலாது.

பூச்சி தொல்லை

நாம் தான் அவர்களின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை வருவதற்கு மிக முக்கிய காரணம், நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் இனிப்பு உணவுகள் தான்.

unknown node

இந்த பிரச்சனைகளுக்காக நாம் உடனடியாக மருத்துவமனைக்கு அனுதினமும் கொண்டு செல்ல இயலாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறையாகளை அறிந்து கொள்வது மிக சிறது.

தற்போது இந்த பதில், குழநதைகளுக்கு ஏற்படும் பூச்சி தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம்.

வசம்பு

unknown node

குழந்தைகளுக்கான பூச்சி தொல்லை பிரச்சனையை நீக்குவதில், வசம்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. குழந்தையால் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்று அறிந்தால், வசம்பை சுட்டு பொடியாக்கி தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால், வயிறிறில் உள்ள பொஊசிகள் எளிதில் இறந்து விடும்.

பால் மற்றும் விளக்கெண்ணெய்

unknown node

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி உருவாகுவதற்கு மிக முக்கிய காரணம், நாம் அவர்களுக்கு உன்ன கொடுக்கும் இனிப்பு வகை உணவுகள் தான். இதனை தடுக்க தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிட கொடுத்து, மறுநாள் பாலில் விளக்கெண்ணெய் கலந்து கொடுத்து வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறி விடும்.

துளசி இலை மற்றும் எலுமிச்சை சாறு

unknown node

சில குழந்தைகளுக்கு வயிற்றில் கொக்கிப்புழு பிரச்னை காணப்படும். இப்படிப்பட்ட கொக்கிப்புழு பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு துளசி இல்லை சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாராய் கலந்து கொடுத்தால், கொக்கிப்புழு வெளியேறிவிடும்.

கொட்டை பாக்கு

unknown node

வயிற்றில் பூச்சி தொல்லை  உள்ளவர்கள்,கொட்டை பாக்கை சந்தானம் போல இளைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். குழந்தைகளின் வயதிற்கேற்ப இந்த மருந்தை கூட்டியோ அல்லது குறைத்தோ கொடுக்கலாம்.

வேப்பிலை கொழுந்து

unknown node

வயிற்றுப்புழு பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு வேப்பிலை கொழுந்து ஒரு சிறந்த மருந்தாகும். வயிற்றுப்புழு பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, வேப்பிலை கொழுந்துடன் சிறிது உப்பை சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டையாக்கி காலையில், வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து பூரண விடுதலை பெறலாம்.