தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
unknown nodeஅதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை.மேலும் இப்படத்திற்கு இயக்குனர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார்.
unknown nodeஇந்நிலையில் வர்மா படத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக 90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த கவுதமியின் மகள் சுப்புலட்சுமி துருவ் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
unknown node#Gautami#Subbulakshmi#ChiyaanVikram#Dhruv#Varma#ArjunReddy