2020க்கான ஐபிஎல் 13வது கிரிக்கெட் தொடர் வரும் 29ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் சென்னை அணியும் பலப்பரீட்சை செய்கிறது. இதற்கானப் பயிற்சியை ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் விளையாடாததால், அவருடைய ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில் சென்னை அணி பயிற்சியின் போது தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து அங்கு வந்த ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். இந்த வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை பார்த்த தோனி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதனிடையே தோனியின் பேட்டிங் குறித்து எழுந்த கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கு வரும் ஐபிஎல் தொடரில் பேட்டிங் மூலம் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.