சென்னை :சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு வந்த புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உறுப்பினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் போலீசார் முன்னிலையில் நடந்ததாகவும், மூர்த்தியின் சட்டை கிழிக்கப்பட்டதாகவும், அவர் பதிலடி கொடுக்க முயன்றபோது கத்தி காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மூர்த்தி விசிக தலைவர் திருமாவளவன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், ஏர்போர்ட் மூர்த்தி மீதான தாக்குதலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ”தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல். காவல் துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கொஞ்சம்கூட கவலை இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
