TNBudget 2024 Live : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்....

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது . அதற்கடுத்து 2 நாள் கூட்டத்தொடர் , கடந்த வியாழன்

tn budget 2024

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது . அதற்கடுத்து 2 நாள் கூட்டத்தொடர் , கடந்த வியாழன் அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் கடந்த வார கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ் பட்ஜெட் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.