தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாள் நடைபெற்றது. இன்றைய நாளில் 2024-25ஆம் ஆண்டு தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் நிதி தமிழக அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். மதுரை எய்ம்ஸ்… கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.! வீடுகட்ட 1.2 லட்சம் : அவர் கூறுகையில், […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தில் காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு கடந்த திங்கள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நேற்று பிப்ரவரி 20ஆம் தேதி 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை அடுத்து இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூடியது. அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை […]
நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து நேற்று 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது . அதற்கடுத்து 2 நாள் கூட்டத்தொடர் , கடந்த வியாழன் அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் கடந்த வார கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல […]
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு “2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 19-ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் இதை தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனவும் பட்ஜெட் கூட்டம் வருகின்ற 22ஆம் தேதி வரை நடைபெறும்” என அறிவித்தார். 1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! […]
இன்று தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் தற்போது ஏற்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக 11.12.2017இல் அதிமுக ஆட்சியில் 12 ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. […]
கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்திற்காக தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதில் தமிழக அரசு அளித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி அதனை புறக்கணித்து, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். மேலும் ஆளுநர் பேசியது சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெறாது என்றும், அரசு கொடுத்த உரைதான் சட்டப்பேரவை நிகழ்வில் பதியப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை அடுத்து, நேற்று முன்தினம் […]
சென்னையில் பேருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வர தாமதமாவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது […]
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நடைபெற்றது வருகிறது. இன்றைய நிகழ்வுகளில் தற்போது, சட்டப்பேரவையின் கேள்வி – பதில் நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்றி மூலமாக நீர் நிரப்பும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த பணி சுணக்கமாக நடைபெற்று வருகிறது, இதை துரிதப்படுத்த வேண்டும் […]
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் நேற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரையை படிக்காமல் […]
நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுதமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இன்று […]
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி சட்டபேரவையில் கூட்டம் தொடங்கும் போதும் , முடியும் போதும் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்க்கப்படவில்லை என தெரிவித்து வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். பின்னர் தமிழகத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது உரிய நிதியை மத்திய அரசு […]
நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. […]
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் உரையாற்றுவதற்கு தமிழக ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆளுநர் ஆர்.என். ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார். இதன்பின் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஆளுநர், கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஆளுநர், […]
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு பக்கங்களை மட்டுமே படித்து விட்டு ஆளுநர் தனது உரையை 2 நிமிடங்களில் முடித்துக்கொண்டார். கடந்த ஆண்டு கூட்டத்தொடர் உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இம்முறை அரசின் உரையை முழுமையாக புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். பின்னர் […]
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று, அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார். சென்ற ஆண்டு உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த நிலையில், இம்முறை அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடத்தில் முடித்துவிட்டு வெளியேறினார். இதன்பின் அரசு தயாரித்த உரையை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 […]
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். இதன்பின், அனைவருக்கும் வணக்கும் என்று தமிழில் கூறி தனது உரையை ஆளுநர் தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் […]
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும்ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் வழக்கமாக சட்டசபை நடைபெறும். இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் போன்ற காரணங்களால் சட்டசபை நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம் …..
2024ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. அரசியலைமைப்பு சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் என்பது அம்மாநில ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம் அந்தவகையில் ஆளுநர் ரவி பேரவையில் காலை 10 மணியளவில் உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. […]