சென்னை : வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நகர தொடங்கியுள்ளதால் வரும் டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசிக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்களுக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்பி கூறியுள்ளார். உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கடந்த ஞாயிற்று கிழமையே கரையை கடந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதாக இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் கடைசி […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை வெளியேற்றும் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக விழுப்புரம், கடலூரில் 3 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் பேரிடர் நிதியாக கேட்டிருந்த […]
Live : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் முதல்… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரை.. சென்னை : வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக புதுச்சேரி, செங்கல்பட்டு , கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் […]
Tamil News Today Live : புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஒரு கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே அதிரவைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கூட்டணி, தொகுதி […]
Tamil News Today Live : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீங்கள் நலமா எனும் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார். அதே போல பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்க உள்ளார். மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள், கூட்டணி நிலவரங்கள், தொகுதி பங்கீடு குறித்தும் பல்வேறு தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
Tamil News Today Live : பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த வாரம் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் 17 இடங்களில் என்ஐஏ (NIA) அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு செய்திகளை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
Tamil News Today Live : தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7.72 லட்சம் மாணவ மாணவியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்னும் பல்வேறு நேரலை நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
Tamil News Today Live : வரும் மக்களவை தேர்தல் குறித்து தொகுதி பங்கீடு வேளைகளில் திமுக கட்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் , மதிமுக உடன் தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அமைச்சர் ராஜினாமா, ஆளும்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் நகர்வுகளை ஆளும் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இதுபோல பல்வேறு அரசியல் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணாலாம் ….
பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடியில் குலசேகரன்பட்டினம் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினர் . மேலும் 17 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்து நெல்லை செல்ல உள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் குறித்து பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். மேலும் இமாச்சல பிரதேசம் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வறு தகவல்களை இந்த நேரலையில் காணலாம்….
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டு அரசியல் நிகழ்வுகள், நலத்திட்டங்கள் துவங்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். இன்று திருப்பூர் , மதுரை மாவட்டங்களிலும் , நாளை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு துறைகளில் நிறைவுற்ற மற்றும் புதிய திட்டங்கள் என 10 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்களை காணொளி வாயிலாக துவங்கி வைக்கிறார். இன்று உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், […]
சென்னை மெரினாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு நிகழ்வுகள் குறித்த நேரலை நிகழ்வுகளை இதில் காணலாம்…. பிரதமர் மோடியின் தமிழக பயணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவுடன் மேற்கொண்டு […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி சலோ எனும் போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் , நேற்று தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். இருப்பினும் ஹரியானாவின் ஷம்பு எல்லை மற்றும் பஞ்சாப்பின் கானௌரி ஆகிய இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் குறித்து தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் பல்வேறு அரசியல் நகர்வு தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பஞ்சாப் , ஹரியானா எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஹரியானா, ஷம்பு பகுதியில் போராடி வரும் விவசாயிகள் சிலர் மீது ஹரியானா காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் பிரதான கட்சிகள் மக்களவை தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனுக்களை அளித்து வருகிறது. அதே போல ஆலோசனை கூட்டங்களையும் […]
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 65 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் எடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. […]
நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து நேற்று 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைநதபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் இன்று தங்கள் போர்ட்டத்தை மீண்டும் டெல்லி நோக்கி ஆரம்பித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுக கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று விருப்ப மனுக்களை பெற உள்ளனர். இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து நேரலையில் காணலாம்…
இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு, பயிர் விளைவிக்க மானியம், வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டம், ராமேஸ்வரம் மீனவர்கள் போரட்டம் வாபஸ் , மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கூட்டணி , தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்.
கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது . அதற்கடுத்து 2 நாள் கூட்டத்தொடர் , கடந்த வியாழன் அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் கடந்த வார கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல […]
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து நாடுமுழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது. நாளை 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக இயங்கி செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…