உலக முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது முதல் காதல் எது என்பது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரும், அவரது மனைவி அஞ்சலியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என அனைவர்க்கும் தெரிந்தது.
unknown nodeஅதனால், சச்சின் வெளியிட்ட வீடியோவில் மனைவி அஞ்சலி குறித்து தெரிவித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு மீதுதான் தனக்கு முதல் காதல் என்று கூறும் வகையில், சச்சின் வலை பயிற்சியில் தாம் ஈடுபட்டிருக்கும் காட்சியை கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், சச்சினை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.