ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்!முதல் பரிசு இத்தனை கோடியா?..!

The Australian Open tennis tournament starts tomorrow! How much is the first prize? ..!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை அதிகாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு தொடங்குகிறது.மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியானது,ஜன.30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில்,ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஆனால், இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால்,முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இந்த போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம,மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா,ஆஸ்லி பார்ட்டி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் ரூ.23.75 கோடியும்,இரண்டாவது இடம் பெறுபவருக்கு ரூ.11.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.எனினும்,முதல் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.