பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டு அரசியல் நிகழ்வுகள், நலத்திட்டங்கள் துவங்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். இன்று திருப்பூர் , மதுரை மாவட்டங்களிலும் , நாளை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு துறைகளில் நிறைவுற்ற மற்றும் புதிய திட்டங்கள் என 10 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்களை காணொளி வாயிலாக துவங்கி வைக்கிறார்.
இன்று உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது.
