சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேபோல், தாம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டையில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வாகனங்கள் நிற்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டு அரசியல் நிகழ்வுகள், நலத்திட்டங்கள் துவங்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். இன்று திருப்பூர் , மதுரை மாவட்டங்களிலும் , நாளை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு துறைகளில் நிறைவுற்ற மற்றும் புதிய திட்டங்கள் என 10 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்களை காணொளி வாயிலாக துவங்கி வைக்கிறார். இன்று உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், […]
சென்னை மெரினாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு நிகழ்வுகள் குறித்த நேரலை நிகழ்வுகளை இதில் காணலாம்…. பிரதமர் மோடியின் தமிழக பயணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவுடன் மேற்கொண்டு […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி சலோ எனும் போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் , நேற்று தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். இருப்பினும் ஹரியானாவின் ஷம்பு எல்லை மற்றும் பஞ்சாப்பின் கானௌரி ஆகிய இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் குறித்து தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் பல்வேறு அரசியல் நகர்வு தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பஞ்சாப் , ஹரியானா எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஹரியானா, ஷம்பு பகுதியில் போராடி வரும் விவசாயிகள் சிலர் மீது ஹரியானா காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் பிரதான கட்சிகள் மக்களவை தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனுக்களை அளித்து வருகிறது. அதே போல ஆலோசனை கூட்டங்களையும் […]
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 65 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் எடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. […]
வேளாண் விளைபொருட்களுக்கு குறைநதபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் இன்று தங்கள் போர்ட்டத்தை மீண்டும் டெல்லி நோக்கி ஆரம்பித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுக கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று விருப்ப மனுக்களை பெற உள்ளனர். இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து நேரலையில் காணலாம்…