ரோமில் துப்பாக்கிச்சூடு! இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் நண்பர் கொல்லப்பட்டார்.!

ரோமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி உட்பட 3பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரோமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி உட்பட 3பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாலிய தலைநகர் ரோமில் நேற்று ஒரு காஃபி ஷாப்பில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி, நிகோலெட்டா கோலிசானோவும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மெலோனி தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

மெலோனி தனது தோழியான நிகோலெட்டா கோலிசானோவின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இவ்வாறு இறப்பது சரியல்ல, நீ ஒரு பாதுகாப்பான தாய் மற்றும் உண்மையான தோழி என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் துப்பாக்கிச்சூட்டை நடத்திய 57 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்த காஃபி ஷாப்பிற்கு வந்தவுடன் கதவை தாழிட்டுக்கொண்டு உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 4பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிரமாக காயமடைந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

unknown node