ரோமில் துப்பாக்கிச்சூடு! இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் நண்பர் கொல்லப்பட்டார்.!

ரோமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி உட்பட 3பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாலிய தலைநகர் ரோமில் நேற்று ஒரு காஃபி ஷாப்பில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி, நிகோலெட்டா கோலிசானோவும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மெலோனி தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். மெலோனி தனது தோழியான நிகோலெட்டா கோலிசானோவின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இவ்வாறு இறப்பது சரியல்ல, … Read more

ஓரினச்சேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள் – போப் பிரான்சிஸ்!

ஓரினச்சேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள் என கோவாவில் போப் பிரான்சிஸ் பேசியுள்ளார். ஓரினச் சேர்க்கை என்றாலே பலரும் அருவருக்கத்தக்க விடயமாக  இந்தியாவில் காணப்படுகிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் இணைவது என்பது முடியாது என்று இந்தியர்களால் கூறப்பட்டு மறுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இது சிலரால் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது. ஆனால் பல நாடுகளில் இதற்கு தற்போது ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் இன்று நடைபெற்ற திரைப்பட விழாவில் … Read more

கர்ப்பமான கன்னியாஸ்திரிகள்! திருச்சபை மேற்கொண்ட அதிரடியான முடிவு!

இத்தாலி நாட்டின் சிசிலியில் தனி பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் இருவர், ‘உங்களது தொண்டு சேவை’ என்ற பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்கா கண்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு  சென்றவர்களில்,34 வயதுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் வயிற்று வழியால் துடித்துள்ளார். இதனையடுத்து கன்னியாஸ்திரியை பரிசோதித்த மருத்துவர், கன்னியாஸ்திரி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மூத்த கன்னியாஸ்திரி ஒருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறு கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் துறவு வாழ்க்கையை விட்டு விலகுவதற்கான முயற்சிகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது. … Read more

இனி பிளாஸ்டிக் கொடுத்தால் இலவசமாக மெட்ரோவில் பயணம்..!

பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொடுத்துவிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள ஜியோவானின் மெட்ரோ  நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது. அங்கு உள்ள mycicero என்ற செயலியை உள்ள  பார்கொட்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் செலுத்த வேண்டும். அப்படி கொடுத்த பிறகு அவர்களுக்கு மெட்ரோ பயணத்திற்கான பணம் ஏறிவிடும் இதை இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் … Read more

இந்த படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் வரை அபராதம்!

ரோம் நகரம் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது. இதனையடுத்து, ரோம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், ரோம் நகரில் அமைந்து சின்னங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1725-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ அல்லது அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ 400 யூரோ அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.31 ஆயிரம் … Read more

ஒரு வீடு 82 ரூபாய்க்கு ?வீடுவாங்க ரெடியா ?புதிய முயற்சியில் இத்தாலி ….

ஒரு வீட்டை 82க்கு விற்பனை செய்யும் முடிவை , இத்தாலி அரசு  மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். அழகிய இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், 1300 பேர் மட்டுமே தற்போது இங்கு வசித்து வருகிறார்கள். அதோடு குழந்தை பிறப்பும் கணிசமாக குறைந்துவிட்டது. அங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். … Read more