ஜி7 இத்தாலி : இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் சர்வதேச பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி திரும்பினார். ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 13 முதல் 15 ம் தேதி […]
ஜோர்ஜியா மெலோனி: இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ. (NDA) 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை X தளத்தில் வாழ்த்தியுள்ளார் . பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை வென்றுள்ளது . அதே நேரத்தில், இந்தியா கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டு பிரதமரான மெலோனி பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்து, “உங்களின் சிறப்பான பணிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். […]
ரோமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி உட்பட 3பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாலிய தலைநகர் ரோமில் நேற்று ஒரு காஃபி ஷாப்பில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி, நிகோலெட்டா கோலிசானோவும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மெலோனி தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். மெலோனி தனது தோழியான நிகோலெட்டா கோலிசானோவின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இவ்வாறு இறப்பது சரியல்ல, […]