நிவர் புயல்: சென்னை வாசிகளுக்காக டேவிட் வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவு.!

Cricketer David Warner on his Instagram page said that he believes everyone in Chennai is safe .Now this post is going viral.

நிவர் புயல் குறித்து கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும், அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இந்த நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புயல் பாதிப்பு குறித்து ஆஸி. அணி கிரிக்கெட் வீரரும் ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சென்னையில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புவதாக கூறி மேக மூட்டத்துடன் காணப்படும் கடற்கரையின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

unknown node