கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் , இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளியும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்கள். இருவரும் பள்ளிப்பருவத்தில் ஜோடியாக விளையாடி அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் என்பதல் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதை தொடர்ந்து வினோத் கம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார்.
unknown nodeஅதில் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன். நீ வாழ்வில் உயரமாக வளர்வது போல கிரிக்கெட்டிலும் வளர வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் சிறுவயது புகைப்படத்தையும் , தற்போது உள்ள புகைப்படத்தையும் சேர்த்து இந்த பதிவை பதிவிட்டு உள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.