இந்தியா , தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 176 , அகர்வால் 215 ரன்கள் அடித்தனர்.இதை தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 431 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக டீன் எல்கர் 160 , குவின்டன் டி காக் 111 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டை பறித்தார்.இன்று 71 ரன்கள் வித்தியாசத்துடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது. இன்று தொடக்க வீரராக ரோஹித் களமிறங்கி உள்ளார்.இந்நிலையில் ரோஹித் இதுவரை தொடக்க வீரராக 200 போட்டிகளில் களமிறங்கி உள்ளார்.மேலும் ரோஹித் தொடக்க வீரராக முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் களமிங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை இந்திய வீரர்களில் 200 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய பட்டியலில் ரோஹித் 8 -வது இடத்தில் உள்ளார்.சேவாக் – 388சச்சின் – 342கவாஸ்கர் – 286தவான் – 243கங்குலி – 237கம்பீர் – 228ஸ்ரீகாந்த் – 217ரோஹித் – 200 *
INDvsSA:அதிக முறை தொடக்க வீரராக களமிறங்கிய பட்டியலில் ஹிட்மேன் ..!
இந்தியா , தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து