INDvsSA: அதிரடி காட்டிவரும் தொடக்க வீரர்கள்..! முதல் சதம் விளாசிய மாயங்க் அகர்வால்..!

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.இதில் முதல் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.இதில் முதல் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தொடங்கியது.தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.  நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 59.1 ஓவர் முடிவில் விக்கெட்டை பறிகொடுக்காமல்  202 ரன்கள் அடித்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.களத்தில் ரோகித் 115 , அகர்வால் 84 ரன்களுடன் இருந்தனர்.  இந்நிலையில் இன்று  இரண்டாம் நாள் ஆட்டம்  தொடங்கியது.நேற்றைய ஆட்டம் போல சிறப்பாக விளையாடி வந்த அகர்வால் 212 பந்தில் 102 ரன்கள் அடித்து டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். களத்தில் தற்போது களத்தில் ரோஹித் 166 , அகர்வால் 130 ரன்களுடன்  விளையாடி வருகின்றனர்.இந்திய அணி ஒரு  விக்கெட்டை கூட இழக்காமல் 79 ஓவர் முடிவில் 299 ரன்கள் அடித்து உள்ளது.