டோக்கியோ ஒலிம்பிக்:பதக்கத்தை உறுதிசெய்தார் லவ்லினா...!

India's Lovlina confirm medal in boxing quarterfinals at Tokyo Olympics

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் லவ்லினா பதக்கத்தை உறுதி செய்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில்,64-69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா,சீன தைபேயின் சின்-சென் நியென்னை எதிர்கொண்டார்.

இப்போட்டியில்,சீன வீராங்கனையை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.இதனால்,ஏதேனும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

unknown node