சுவையான பீட்ரூட் வடை செய்வது எப்படி தெரியுமா?

பீட்ரூட்டை குழம்புக்கு பயன்படுத்தினால் பலருக்கு பிடிக்காது. ஆனால், அதே பீட்ரூட் வடை செய்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அது எப்படி

பீட்ரூட்டை குழம்புக்கு பயன்படுத்தினால் பலருக்கு பிடிக்காது. ஆனால், அதே பீட்ரூட் வடை செய்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அது எப்படி செய்வது? வாருங்கள் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட்

வெங்காயம்

பச்சைமிளகாய்

கருவேப்பிலை

சோள மாவு

கடலை மாவு

எண்ணெய்

உப்பு

செய்முறை

பீட்ரூட்டை சிறிது சிறிதாக துருவி அதனுடன் சோள மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கடலைமாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். மாவு பதத்திற்கு வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டையாக தட்டி பொரித்தெடுக்கவும், அட்டகாசமான பீட்ரூட் வடை தயார்.