ஒலிம்பிக் மல்யுத்தம்:அரையிறுதியில் தீபக் புனியா தோல்வி ..!

Deepak Punia loses to US wrestler in semifinals of Tokyo Olympic men's wrestling

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த அரையிறுதியில் தீபக் புனியா,அமெரிக்க வீரரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில்,அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸினை தீபக் எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேவிட்,போட்டியின் இறுதியில் 10-0 என்ற கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதனால்,வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை தீபக் இழந்தார்.மேலும்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தீபக் புனியா விளையாடவுள்ளார்.

unknown node