வெஸ்ட் இண்டீஸ் எதிரான டி20 தொடர் அட்டவணையில் திடீர் மாற்றம் ..!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இப்போட்டி வருகின்ற 06-ம்  தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் டி20

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இப்போட்டி வருகின்ற 06-ம்  தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் டி20 போட்டிக்கான தொடர் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது மொத்தம்  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  டிசம்பர் 06-ம்  தேதி முதல் போட்டி மும்பையிலும் , டிசம்பர் 8-ம் தேதி இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்திலும் , டிசம்பர் 11-ம் தேதி மூன்றாவது போட்டி  ஹைதராபாத்திலும் நடக்க இருந்தது.தற்போது முதல் டி20 போட்டி மும்பைக்குப் பதிலாக  ஹைதராபாத்திலும்,  மூன்றாவது போட்டி ஹைதராபாத்திற்கு பதிலாக மும்பையிலும் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி அறிவித்தபடியே திருவனந்தபுரத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.எனவே மும்பையில் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான சூழல் இல்லை. உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மும்பை போலீசார் கடிதம் அனுப்பியதை  தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.