கனமழை எதிரொலி... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தந்த மாவட்டத்தில் மழையின் பாதிப்பு குறித்து அறிந்து

Heavy Rain in Tamilnadu

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தந்த மாவட்டத்தில் மழையின் பாதிப்பு குறித்து அறிந்து மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் லேசான தூறல் மழை ஆரம்பித்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ , மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.

அதேபோல காரைக்காலில் கனமழை காரணமாக  அம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். கோவையில் மழையின் அளவை பொருத்து விடுமுறை அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.