வாட்ஸப்பில் இனி 50 பேர் வீடியோ காலில் பேசலாம் தயாராக இருங்கள்

வாட்ஸப் தனது பயனர்களுக்கு புதிய வசதியாக பேஸ்புக் மெஸ்சேஞ்ருடன் இணைந்து வீடியோ கால் வசதியை தர உள்ளது .

வாட்ஸப் தனது பயனர்களுக்கு புதிய வசதியாக பேஸ்புக் மெஸ்சேஞ்ருடன் இணைந்து வீடியோ கால் வசதியை தர உள்ளது .

unknown node

Video Conferencing

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமுழுவதும் பல நாடுகள் ஊரடங்கை சந்தித்து வரும் வேளையில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தங்கள் நிறுவன வேலைகளை செய்து வருகின்றனர் .இதனால் தங்கள் உடன் பணியாற்றுவர்களோட பேச வேலைகளை பகிர்ந்துகொள்ள வீடியோ காலிங் வசதி அத்தியாவசியமாக மாறியுள்ளது .

இதனால் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து  அவர்களுக்கு ஏற்றவாறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர் .இதில் சமீப காலத்தில் மிக பிரபலமாக மாறியதுZOOMசெயலி மற்றும்Google Meetஇதனால் பேஸ்புக் வாட்ஸப் மற்றும் மெஸ்சேஞ்ரில் தனது பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது .

Facebook  Messenger Room

பேஸ்புக் நிறுவனம்  மெஸ்சேஞ்ரில் வீடியோ கான்பரன்சிங்க்காக 50 பேர் வரை பேசக்கூடியபேஸ்புக் மெசஞ்சர் ரூம்என்ற புதிய வசதியா ZOOM மற்றும் Google Meet க்கு போட்டியாக தொடங்கியது . இதை  தற்பொழுது வாட்ஸப் உடன் இணைக்க புதிய வசதியை கொண்டுவரவுள்ளது .

Whatsapp to Messenger Room

நம் மொபைல்களில் பயன்படுத்தும் வாட்ஸப்பை கணினியில் பயன்படுத்த வாட்ஸப் வெப் என்ற வசதி ஏற்கனவே உள்ளது .இதில் புதியதாக வீடியோ ஐகான் இணைக்கப்பட உள்ளது. அதை கிளிக் செய்யும்பொழுது நேரடியாகபேஸ்புக் மெசஞ்சர் ரூம் -க்குசென்றுவிடும் ,இதில் 50 நபர்கள் வரை இணையலாம்  .

இதன் சிறப்பசம் என்னவென்றால் பேஸ்புக் மெசஞ்சர் மற்றும்  பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களும் Facebook  Messenger Room இல் இணைய முடியும் .பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது வாட்ஸப் வெப்பில் பீட்டா வெர்சனாக  2.2019.6 வெளியிட்டுள்ளது இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் விரைவில் வெளியாகவும் என்று தெரிவித்துள்ளது .

unknown node