வாட்சப்பில் அப்டேட் வந்துவிட்டால் அதை தவறாமல் தெரிந்து கொள்வோர் பலர். எந் அப்டேட் சிறப்பாக உள்ளத்தில் என ரிவியூ எழுதுவோரும் பலர். இது வாட்சப்பிற்கு மட்டுமே கிடையாது. இருப்பினும் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று பலரும் வாட்ஸப்பையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர்.
unknown nodeகுறுந்செய்தி அனுப்பும் வசதி முதல் எமோஜி, ஸ்டிக்கர்ஸ் வரை எல்லாவற்றிலும் இது தனித்துவமாகவே உள்ளது. அதே போன்று சமீப காலமாக பயனாளிகளை கவர புது புது அப்டேட்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது காதலர்கென்று ஒரு அப்டேட் வரவுள்ளதாக பேசப்படுகிறது. எது என்ன அப்டேட் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.
unknown nodeDark Modeஇந்த வார்த்தையை பல இடங்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். “Dark Mode” என்பது இரவில் கண்கள் கூசாமல் இருக்கவும், அதிக வெளிச்சத்தில் இருந்து நம் கண்களை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பம்சமாகும். இந்த வசதி ஏற்கனவே டெலிகிராம், டிவிட்டர் போன்றவற்றில் உள்ளது. இது தற்போது வாட்ஸப்பிலும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.
unknown nodeவசதிபெரும்பாலும் இன்றைய இளசுகள் தங்களது காதலை இரவு நேரங்களில் தான் வெளிக்காட்டி வருகின்றனர். இதற்கு ஒரு ஊடகமாக வாட்சப் உள்ளது. இப்படி காதல் செய்வோரின் கண்கள், வாட்சப் திரையின் வெளிச்சம் பாதிக்காமல் இருக்க சிறந்த வழியாக இந்த கருப்பு திரை அமையும். ஆனால், இதை இன்னும் அதிகாரபூர்வமாக வாட்சப் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.