Vodaphone மற்றும் ஐடியா நிறுவனம் தற்பொழுது வோடபோன் ரெட் டுகெதர் போஸ்ட்பெயிட் என்ற சலுகையை அதிரடியாக அறிவித்துள்ளது.Vodaphone னின் இந்த புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய சலுகையை கொண்டு 5 விதமான இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த வகையில் ஒரு இணைப்புக்கான கட்டணமாக ரூ.200 மட்டுமே.Vodaphoneனின் இந்த புதிய சலுகையுடன் தனது பயனர்களுக்கு அமேசான் பிரைம் மற்றும் வோடபோன் பிளே அதனுடன் மொபைல் ஷீல்டு, ஒற்றை பில் என்று பல சிறப்பு பலன்களை வழங்கப்படுகிறது.
unknown nodeஅதன் படி இந்த சலுகை ஆனது ஒரு இணைப்புக்கு 30 GB டேட்டா உடன் அதிகபட்சமாக 50 GB டேட்டாவினை ROLL OVER செய்து கொள்ளுகின்ற வசதியை பெற்றுள்ளது.மேலும் குடும்ப தலைவருக்கு 80 GB டேட்டா மற்றும் அதிகபட்சமாக 200 ஜி.பி ROLL OVER வசதியும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் இதனோடு ஒரு வருடத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.அத்தோடு மட்டுமல்லாமல் vodafone play சந்தா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.இதில் பயனர்கள் ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், , ஜீ5, ஷீமாரு, ஹோய் சோய்,சோனி லைவ், உள்ளிட்ட சேவைகளில் தரவுகளை எல்லாம் கண்டுகளிக்க முடியும்.இத்தோடு தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச மொபைல் ஷீல்டு என்ற ஒன்றை வழங்குகிறது.அதில் குடும்ப உறுப்பினருக்கு ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு சேவையும் வழங்குகிறது. மேலும் இதில் பயனர்களின் ஸ்மார்ட்போனிற்கு ஏற்படும் எந்த வித பாதிப்புகளும் சரிசெய்து வழங்கப்படுகின்றன.