வந்தாச்சு புதிய விதி! WhatsApp Web பயனர்களுக்கு அதிர்ச்சி!

வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு முறை தானாகவே லாக்-அவுட் ஆகும் விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி :இந்தியாவில் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வர உள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளதாவது, தேசிய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1, 2026 முதல் வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் பதிப்பில் உள்நுழைந்த பயனர்கள் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே லாக் அவுட் (log out) செய்யப்படுவார்கள். இதனால், மீண்டும் பயன்படுத்த விரும்பினால் QR கோடு ஸ்கேன் செய்து மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கும்.இது DoT (Department of Telecommunications) வெளியிட்ட SIM binding விதிகளின் ஒரு பகுதியாகும்.

இந்த விதிகள் நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 28, 2026 வரை இணக்கம் காட்ட வேண்டிய காலக்கெடு விதிக்கப்பட்டது. அமைச்சர் சிந்தியா எந்த நீட்டிப்பும் இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.இந்த விதி மொபைல் ஆப்-இல் உள்ள நேரடி இணைப்பை பாதிக்காது; வெப்/டெஸ்க்டாப்/லேப்டாப் போன்ற கூடுதல் சாதனங்களில் மட்டுமே 6 மணி நேர தானியங்கி லாக் அவுட் அமலாகும்.

SIM கார்டு போனில் இல்லாவிட்டால் சில சமயங்களில் சேவை நிறுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த மாற்றம் பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும், சைபர் ஃப்ராட் (cyber fraud) மற்றும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அவசியம் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம், போன்ற OTT செயலிகளுக்கும் இதே விதிகள் பொருந்தும். பயனர்கள் தங்கள் SIM கார்டை ஆக்டிவாக வைத்திருப்பது முக்கியம்.