காரை விட குறைந்த விலையில் மனித உருவ ரோபோ.. முன்மாதிரியை வெளியிட்ட எலோன் மஸ்க்..
ஒரு காரை விட குறைவான விலையில் டெஸ்லாவின் மனித உருவ ரோபோக்கள்.. முன்மாதிரியை வெளியிட்டார் மஸ்க்.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், இன்று(அக் 1) நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ‘ஏஐ’ தின நிகழ்வின் போது, ‘ஆப்டிமஸ்’ என அழைக்கப்படும் மனித உருவ ரோபோவின் முன்மாதிரியை வெளியிட்டார்.
இந்த நிகழ்வின் போது, ரோபோ மேடையில் நடந்து வருவது, வணக்கம் வைப்பது மற்றும் நடனமாடுவது என பல திறமைகளை வெளிப்படுத்தியது.
‘ஆப்டிமஸ்’ என்ற இந்த ரோபோ குறித்து மஸ்க் கூறுகையில், இந்த ரோபோவால் மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளை செய்ய முடியும் என கூறினார். மேலும் இதன் விலை ஒரு காரை விட குறைவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.