ஏர்டெல் பயனர்களே குட் நியூஸ்! Jio Hotstar சேவை இலவசமா வேணுமா?

AIRTEL நிறுவனம் 90 நாட்களுக்கான Jio Hotstar-ஐ இலவசமாக குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்குகிறது.

Hero Image

டெல்லி : ஐபிஎல் 2026 தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், Airtel நிறுவனம் தனது பயனர்களுக்காக ஒரு மிகப் பெரிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சலுகையின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Jio Hotstar சேவையை 90 நாட்களுக்கு முழுமையாக இலவசமாக பயன்படுத்தலாம். இதனுடன் கூடுதலாக 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரலையில் பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள சலுகையாகும்.

இந்த சலுகை அனைத்து பயனர்களுக்கும் அல்ல; ஏற்கனவே ஏர்டெல் நெட்வொர்க்கில் உள்ள தகுதியான வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்படுகிறது. சலுகை கிடைக்கிறதா என்பதை அறிய, பயனர்கள் Airtel Thanks App-ஐ திறந்து “Offers” அல்லது “Rewards” பிரிவில் சென்று பார்க்க வேண்டும். அங்கு Jio Hotstar 90 நாட்கள் இலவச அணுகல் மற்றும் 12GB டேட்டா பற்றிய தகவல் தானாகவே காட்டப்படும். அதை ஒரு கிளிக்கில் செயல்படுத்திக்கொள்ளலாம்.

இந்த சலுகை குறிப்பாக ஐபிஎல் ரசிகர்களை குறிவைத்து அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், Indian Premier League போட்டிகளை HD அல்லது 4K தரத்தில் பார்க்க வேண்டுமென விரும்புபவர்களுக்கு, கூடுதல் டேட்டா செலவு இல்லாமல் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. 90 நாட்கள் என்ற நீண்ட காலமும் இந்த சலுகையின் முக்கிய அம்சமாகும்.

மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த சலுகை மூலம் ஏர்டெல் பயனர்கள் எந்த தடையும் இல்லாமல், உயர்தரத்தில் ஐபிஎல் போட்டிகளை ரசிக்க முடியும். மேலும், கூடுதல் 12GB டேட்டா வழங்கப்படுவதால், வீடியோ ஸ்ட்ரீமிங் அனுபவம் இன்னும் சுலபமாகும். ஆகையால், ஏர்டெல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக Airtel Thanks App-ஐ சரிபார்த்து, இந்த சலுகையை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுவது நல்லது