#BREAKING: வாட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு – பேஸ்புக்குடன் தகவல்கள் பகிரப்படாது.!

WhatsApp has announced that the individual's cell phone details and location address will not be shared with Facebook.

தனிநபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி பேஸ்புக்கிற்கு தகவல்கள் பகிரப்படாது என்று வாட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் எனவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என அறிவித்துள்ளது.

மேலும், பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பயனாளர்கள் நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ தங்களால் முடியும் என தெரிவித்துள்ளது.

தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பின் புதிய விதிகளால் பலர் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிலுக்கு மாறிய நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node