உத்தரபிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வரும் சூழலில் 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் மாநில அரசிசு சார்பில் முதியவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்ற ஜனவரி 30 வரை மாநில அரசின் சார்பில் முகாம்கள் நடைபெற்று வரும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது . உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா புஷ் பூர்ணிமா விழாவையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடுகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கும்பமேளா திருவிழா பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி நடைபெற்றுவருகிறன்து. சுமார் 50 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா வருகின்ற மார்ச் 4ஆம் தேதி வரை […]
பசுக்களை பாதுகாக்க பசு காப்பகங்கள் அமைக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பசு பாதுகாப்பு குறித்து சில யோசனைகளும் , புதிய உத்தரவுகளும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் பிறப்பிக்கப்பட்டது. அதில் எல்லா தெருக்களிலும் ஆதரவின்றி அனாதையாக சுற்றித்திரியும், கால்நடைகளை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்க வேண்டி புதிதாக ஒரு பசு பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரசு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார். பசு பாதுகாப்புக்குழு பரிந்துரைகளை, மாநில தலைமை செயலர் […]
முன்னாள் முதலமைச்சரை ஆதரித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ஊனமுற்ற வாலிபரை பாரதீய ஜனதா கட்சிதலைவர் தாக்கிய சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தின் சந்துசி தெஹில் பகுதியில் இருக்கும் குர்ஜா கேட் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குஜார் ஆவார்.இவர் ஒரு ஊனமுற்ற மாற்றுதிறனாளி . அந்த மாற்றுத்திறனாளி மோடியையும்,யோகியையும் விமர்சித்ததாக கூறப்படுகின்றது.இதனால் ஆத்திரமடைந்த பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி முகமது மியான் என்பவர் நீ அகிலேஷ் யாதவுக்கு வாக்களித்தவன் என கூறி தனது வாகனத்திலிருந்த குச்சியை […]
உத்தரப்பிரதேசத்தில் தன்னுடைய மனைவியை தம்பிக்கு மனைவியாக இருக்க சொல்லி மனைவியை கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி இவருக்கு வயது23 ஆகும்.இவருடைய கணவர் விஷால்.இந்த தம்பதிகள் நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்த போதும் விஷாலுக்கு அவரின் தம்பி மனைவி சோனு மீது காதல் கொண்டார். அதே போன்று தம்பிக்கோ அண்ணன் மனைவி லட்சுமியின் மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் அண்ணன் விஷாலின் மனைவி லட்சுமியை தம்பிக்கும், தம்பி யோகேந்திராவின் […]
அனுமன் குறித்து அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜ.க. சார்பில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அனுமன் ஒரு தலித் என்று பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எதிராக யோகி ஆதித்யநாத் […]
உத்திரப் பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத குழந்தையை தந்தையே கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரதாபாத்தை சேர்ந்த சாஜத் என்பவர் தனது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத குழந்தையை கத்தியால் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக சாஜத்தின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சாஜத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மனைவியின் தவறான நடத்தையை கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் குழந்தையை சாஜத் தாக்கியதாகவும் […]
பைக்கின் ஆவணங்களை கேட்ட போலீசை வீட்டுக்கு கூட்டிச் சென்று தனது பைக்கையே தீயிட்டு கொளுத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாகன சோதனை செய்து கொண்டிருந்த போலீசாரிடம், எந்த ஆவணங்களும் இன்றி மாட்டிய நபர், வீட்டுக்கு வந்தால் ஆவணங்களை காட்டுவதாக கூறி போலீசை, வீட்டுக்கு அழைத்து வந்து தாக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி […]
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நாயை அடித்ததற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தில் பதேவ் என்ற கிராமத்தில் சச்சின் காஷ்யப் (வயது 25) என்பவர் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அவரை நோக்கி நாய் ஒன்று குரைத்தபடி விரட்டி வந்துள்ளது.இதனால் காஷ்யப் நாயை அடித்துள்ளார். இதற்கு அங்கிருந்து பார்த்த 3 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும், காஷ்யப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவதம் முற்றி அவர்கள் காஷ்யப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெறும் 10 ரூபாய்க்காக 20 ஆண்டுகள் பழகிய நண்பனை முடிதிருத்தும் கத்தரிக்கோலால் குத்தி கொலைசெய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியைச் சேர்ந்த அஹிபரான் லால் என்பவர் சலூன் கடை வைத்துள்ளார். அவரது நண்பரான பிரேம்பால் கங்வார் என்பவர் நேற்று மாலை கடைக்கு வந்துள்ளார். அப்போது, அவர்களுக்கிடையே 10 ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் விளையாட்டாக சண்டை போடுகின்றனர் என மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்க, இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு கைக்கலப்பாக […]
லக்னோ, பருவமழை காரணமாக இந்தியாவில் பல பகுதியில் மலை பொய்து வருகின்றது.இதில் பல மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன.குறிப்பாக கேரளா மிகப்பெரிய பேரழிவை சந்தித்தது.இந்நிலையில் ஆந்திரா மாநிலம் ,டெல்லி , நாகலாந்து என மழை தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது.இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி போன்ற மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து […]