நாயை அடித்தவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை..!!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நாயை அடித்ததற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தில் பதேவ் என்ற கிராமத்தில் சச்சின் காஷ்யப் (வயது 25) என்பவர் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அவரை நோக்கி நாய் ஒன்று குரைத்தபடி விரட்டி வந்துள்ளது.இதனால் காஷ்யப் நாயை அடித்துள்ளார். இதற்கு அங்கிருந்து பார்த்த 3 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும், காஷ்யப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவதம் முற்றி அவர்கள் காஷ்யப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காஷ்யப் பலியானார். இதனை அடுத்து சஞ்சய், பங்கஜ் மற்றும் சச்சின் குமார் தண்டா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நாயை அடித்ததுக்கு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU