பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள்…..உ.பி முதல்வர் யோகி அதிரடி உத்தரவு…!!
பசுக்களை பாதுகாக்க பசு காப்பகங்கள் அமைக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பசு பாதுகாப்பு குறித்து சில யோசனைகளும் , புதிய உத்தரவுகளும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் பிறப்பிக்கப்பட்டது. அதில் எல்லா தெருக்களிலும் ஆதரவின்றி அனாதையாக சுற்றித்திரியும், கால்நடைகளை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்க வேண்டி புதிதாக ஒரு பசு பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரசு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார். பசு பாதுகாப்புக்குழு பரிந்துரைகளை, மாநில தலைமை செயலர் ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்த பசு பாதுகாப்பு கூடம் ஜில்லா பஞ்சாயத்து அளவில் அமைக்கப்பட்டு அதில் பசுக்களுக்கு தேவையான தீவனம் , கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்கப்படும் என்றும் , பசு பாதுகாப்பு கூடத்தை பராமரிக்க 16 மாநகராட்சிகளுக்கும் தலா 10 கோடி ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.