விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை சுற்றி இருந்த இரும்பு கூண்டை உடைத்து பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பெரியார் சிலையின் முகப் பகுதி சேதம் அடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும்,கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை மீது காவி பொடி தூவி மற்றும் செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செயலில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டனர்.இதனையடுத்து,இதற்கு கண்டனம் தெரிவித்து,இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி […]
சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குங்குமம் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டடுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளராகவும், சமூகப்புரட்சியின் வழிகாட்டியாகவும், புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராகவும் , பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராகவும் , மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகவும் செயல்பட்ட தந்தை பெரியார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெரியார் சிலை மீது ஷூ வீசுவது, சிலை மீது காலணிகளை வைப்பது உள்ளிட்ட செயல் நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சினர் கடும் எதிர்ப்பை […]
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்! உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் பங்கெடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும்போது “புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியில் இரவில் மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு முன் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா,நாகலாந்து ஆகியவைகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் ஆளும் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தோற்கடித்து பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றது. பின்பு திரிபுராவில் மாமேதை லெனினின் சிலை பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் தகர்க்கப்பட்டது.அப்போது பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ,தெரிவிப்பதும் பதிவிடுவதும் வழக்கம்.இந்நிலையில் அவர் “திரிபுராவில் லெனினின் சிலை தகர்க்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜாதிவெறியன் பெரியார் சிலை” என பதிவிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு. அஸம்காரில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையில் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாரதிய ஜனதா கட்சியினர், ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தள்ளினர். இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாரதிய ஜனதா […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரியார் குறித்த ஹெச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல்.அம்பேத்கர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெயிண்ட் வீசியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்தும், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திரிபுராவில் மாமேதை லெனின் சிலை,தமிழகத்தில் பெரியார் சிலை,உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் அண்ணல் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தபட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள திருவெற்றியூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அவமதிப்பு நிகழ்ந்துள்ளது.
தமிழை கொச்சைப்படுத்தி வன்முறையை தூண்ட நினைத்தால் ஹெச்.ராஜாவுக்கு சிறை உறுதி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதற்கு முன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழ்மொழி என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா. பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக என்றும் எல்லா விதத்திலும் தமிழ்மொழி என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்லே திராவிடம் என்றும், தனது கருத்துக்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தன்னை சிலர் வசைபாடுவதாகக் கூறியிருந்தார். மேலும் செய்திகளுக்கு […]
தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது,நான் சொல்வதை மட்டுமே மாநில பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இணையத்தில் பதிவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். பேஸ்புக்கில் அட்மின் கருத்து பதிவிட்டதற்கு ஹெச். ராஜா மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? பெரியார் சிலை விவகாரத்தில் விளக்கத்தை ஏற்றுதான் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி , தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசினால் ஒட்டுமொத்த தமிழகமே ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், எச். ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
போலீசார், கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.கோவை காந்திபுரம் சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் இந்த அலுவலகத்தில் அதிகாலை மூன்றரை மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டுகளை வீசியவர்கள் தந்தை […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரியார் சிலை குறித்து முகநூலில் பதிவிட்டது ஹெச்.ராஜா தான் என்றும், அவரது அட்மின் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரியார் குறித்து ஏற்கனவே அவதூறாக பேசிய போதும், ஹெச்.ராஜாவை நடமாட விட்டது தவறு என குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும்,மேலும் இது குறித்து பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய என்று வலியுறுத்தி நாகையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கண்டனம் போராட்டம் நடத்தினர். அதேபோல் பாரதிதாசன் பல்கலை கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பெரியார் சிலை உடைப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களால் இனி கனவிலும் கூட பெரியார் சிலையை அகற்றும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின், பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக , தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பெரியார் சிலை உடைப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களால் இனி கனவிலும் கூட பெரியார் சிலையை அகற்றும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது. பெரியாரின் பேரப்பிள்ளைகளான தி.மு.க தோழர்கள் தாங்கள் யார் என்பதை […]