மும்பை: கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி வரை சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி மின்னஞ்சல் முகவரி மூலமாக மிரட்டல் மெயில் வந்தது. அதனை தொடர்ந்து பயணிகள் அவசரகதவு வழியாக வெளியேற்றப்பட்டு விமானம் முழுக்க வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது. இறுதியில் மிரட்டல் செய்தி போலி என தெரிவிக்கப்பட்டது தற்போது அதே போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்று சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் […]
மும்பையில் உள்ள விமான நிலையத்தில் 6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பையில் கார்பன் நியூட்ரலாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஆறு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. டிசம்பர் 9 முதல் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக பயன்படுத்தும் வகையில் பொதுவான சார்ஜிங் நிலையங்களாக விமான நிலையத்தில் கார்பார்க்கிங் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் EV சார்ஜிங் நிலையங்களை […]
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் வெளிநாட்டு நபரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு வெளிநாட்டு நபரை கைது செய்துள்ளனர். பிடிபட்ட நபரிடமிருந்து மருத்துவ நடைமுறையை பின்பற்றி ஆய்வு நடத்திய போதை பொருள் தடுப்பு அமைப்பு ரூ.1 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள டவ்தே புயல் காரணமாக மும்பை விமான நிலையம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் தீவிரமான புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் அதிதீவிரமாக மாறிவரும் நிலையில் குஜராத்தில் உள்ள போர்பந்தர் -மதுரையில் இன்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு […]
தனியார் வங்கியான “யெஸ் வங்கி” அதிகமான கடன்களை கொடுத்ததால் வாராக்கடன் அதிகரித்துள்ளது. இதனால் நெருக் கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் ஒட்டு மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கும் படியும் ,மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும் வரை இதை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் யெஸ் […]
மும்பை விமான நிலையம் ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் ஆயிரம் விமானங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் மொத்தம் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. பெரும்பாலும் முதன்மையான ஓடுபாதையில் மட்டுமே விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரே ஓடுபாதை கொண்ட விமான நிலையங்களிலேயே மிகவும் அதிகம் போக்குவரத்தை கொண்டது என்கிற பெருமை மும்பை விமான நிலையத்துக்கு உண்டு. இந்நிலையில் செவ்வாயன்று 24மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து மூன்று விமானங்கள் இந்த நிலையத்துக்கு வந்து சென்றுள்ளன. ஏற்கெனவே […]